திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென்று லோகேஷ் கனகராஜை விட்டு விலகிய உதவிய இயக்குனர்.! என்ன காரணம்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதலில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை. இதன்பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான ரத்தினகுமார் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக செய்தி பரவி வருகிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கினார். படத்தில் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும்.
மேலும் சமீபத்தில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் லோகேஷ் கனகராஜன் உதவி இயக்குனரான ரத்தினகுமார் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார். இதனால் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து 'தலைவர் 171' திரைப்படத்தில் ரத்தினகுமார் உதவி இயக்குனராக பணிபுரிவது போவதில்லை என்ற செய்தி வெளியாகி வந்தது.
இது போன்ற நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ரத்தினகுமார் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' திரைப்படத்தின் உதவி இயக்குனராக இணைந்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வ தகவல். இனி லோகேஷ் கனகராஜூடன் இணைந்து ரத்தினகுமார் பணிபுரிவது இல்லையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.