மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தொடரும் மரண ஓலம்!! அசுரன் பட பிரபல நடிகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
புதுப்பேட்டை, அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துவருவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, மாறன், ஜோக்கர் துளசி, நெல்லை சிவா என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல தமிழ் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றினால் இன்று அதிகாலை உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.