மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! சிறந்த தமிழ் படமாக தனுஷின் மாஸ் திரைப்படம் தேர்வு!!
67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த தமிழ் படமாக 2019-ம் ஆண்டு வெளியான தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அசுரன்.
இத்திரைப்படத்தில் தனுஷ் இளைஞராக மற்றும் வயதான என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தனுஷ்க்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். மேலும் அவர்களுடன்
பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ், கென் கருணாஸ், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரான இப்படம் தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் 67வது தேசிய விருதுக்கு தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.