மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுதான் குக் வித் கோமாளியில் எடுத்த கடைசி போட்டோ! எமோஷனலாக அஸ்வின் வெளியிட்ட பதிவு! கூட யார்னு பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, அருமையாக சமைத்து அசத்தி இறுதி போட்டிக்கு தகுதியானவர் அஸ்வின். இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார். மேலும் அஸ்வின் விளம்பரங்கள், குறும்படங்கள் மற்றும் வெள்ளித்திரையில் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையச் செய்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
அதிலும் இவருடன் கோமாளியாக வந்த ஷிவாங்கி செய்த அட்ராசிட்டிகள் வேற லெவல். அந்த ஜோடி மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது.
இந்நிலையில் இறுதி நிலைக்கு வந்துள்ள குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சிகள் நாளை மதியம் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்தது ரசிகர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்கள் என அனைவருக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் மிகவும் எமோஷனலாக சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில் போட்டியாளரான அஸ்வின் இரண்டாம் புலிகேசி வேடத்தில் இருக்கும் ஷிவாங்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது தான் குக் வித் கோமாளியில் எடுத்த கடைசி புகைப்படம் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.