இயக்குனர் அட்லீ வீட்டில் விசேஷமாம்! வாழ்த்து கூறும் பிரபலங்கள்! என்ன விஷயம் தெரியுமா?



Atlee priya 5 years wedding anniversary

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார் இயக்குனர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்த அட்லீ ராஜா - ராணி திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அட்லீயின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

ராஜா - ராணி படத்தை அடுத்து தெறி, மெர்சல் என தளபதி விஜய்யை வைத்து மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ தற்போது மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்து பிகில் என்ற மற்றொரு வெற்றிப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

atlee

இந்நிலையில் ராஜா ராணி திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்ற கையோடு தனது தோழியும், காதலியுமான நடிகை ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ. அவர்கள் திருமணம் முடிந்து நேற்றுடன் 5 வருடம் நிறைவடைகிறது.

தங்களுக்கு திருமணம் முடிந்து தற்போதுவரை 43,823 மணி நேரம் ஆகியிருப்பதாகவும், தனது தோழியும், மனைவியுமான பிரியாவுடன் நீண்ட நாள் வாழ வாழ்த்து தெரிவிப்பதாகவும் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அட்லீ - ப்ரியாவின் 5 ஆம் ஆண்டு திருமண நாளிற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.