ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட்லீயின் இந்த படத்திலும் இப்படி ஒரு சோதனையா! வருத்தத்தில் ரசிகர்கள்!
தெறி, மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தான் பிகில்.
இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அட்லீ ஆகஸ்ட் மாதமே படத்தை முடிக்க வேண்டும் என விரும்பிய நிலையில் தற்போது, படத்தின் ஸ்டெண்ட் மாஸ்டர் சண்டைக்காட்சிக்கு எனக்கு இன்னும் 22 நாட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட அட்லீக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது, இந்த முறையாவது சொன்ன தேதியில் படத்தை முடித்துக்கொடுக்கலாம் என்று பார்த்தால் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதாக கூறப்படுகின்றது.