மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயலான் படத்தில் வேற்றுகிரகவாசி போல பேசியது யார்?; சர்ப்ரைஸை உடைத்த படக்குழு.!
கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா, கருணாகரன், பானு பிரியா உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த ஏலியன் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது, தனது கிரகத்திற்கு செல்ல முயற்சிக்கிறது.
இவர்களின் நட்பை பிரிக்க எண்ணி செயல்படும் வில்லன் குழு என்ன செய்தது? அதில் இருந்து ஏலியன் தப்பித்ததா? என்பது தொடர்பான கதையாக இப்படம் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் இசை வெளியீடு விழா டிசம்பர் 26ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், படத்தில் அயலான் என்ற ஏலியனுக்கு பின்னணி குரல் யார்? கொடுத்தது என பலரும் கேட்டிருந்தனர். தற்போது அதற்கான பதில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக இருக்கும் சித்தார்த், அயலானுக்கு பின்னணி குரல் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் படக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.