மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் நாளே இத்தனை கோடியா?? அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அயலான் திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டுவருகிறது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை கடந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனத்தை பெற்றுவருகிறது அயலான் திரைப்படம். குறிப்பாக குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அயலான் திரைப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளே இப்படம் 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மாவீரன் படத்தை தொடர்ந்து அயலான் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.