மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயலான் 2வருடங்களுக்குப் பிறகு வெளியான அப்டேட்.!
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படத்தில் ரகுல்பிரீத்சிங், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றது.
அதிக அளவிலான பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் இருந்து சகோ என்ற பாடல் கடந்த 2021-ஆம் வருடம் வெளியானது. இந்த திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்கள் சென்ற பின்னரும் இந்த திரைப்படம் தொடர்பான எந்த விதமான தகவலும் வெளியாகாததால், ஒருவேளை இந்த திரைப்படம் கைவிடப்பட்டது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோ அயலான் திரைப்படம் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது.
இந்நிலையில்தான் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி 2 வருடங்களுக்கு பின்னர் இந்த திரைப்படத்தின் 2-ம் பாடல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அயலா, அயலா என்று ஆரம்பமாகும் இந்த பாடல் எதிர்வரும் 20-ம் தேதி அதாவது நாளைய தினம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.