#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"வீடியோ லிங்க் இருக்கு, ஓபன் பண்ணா படம் ஓடல" - அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டுடன் ட்விஸ்ட் வைத்த ஐங்கரன் இன்டர்நேஷ்னல்.!
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் அல்டிமேட் சூப்பர்ஸ்டார் தல அஜித் குமார், சுருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், யோகிபாபு உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் வேதாளம்.
கடந்த 10 நவம்பர் 2015 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியானது. பாக்ஸ் ஆபிசில் ரூ.150 கோடி வரை அன்று வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அண்ணா - தங்கை பாசம், ஆக்சன் காட்சிகள் காரணமாக தமிழகமெங்கும் வரவேற்பு பெற்றது.
படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் மேற்கொண்டு இருந்தார். ஸ்ரீ சாய்ராம் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்கி இருந்தது. இந்நிலையில், இன்று ஸ்ரீ ஐங்கரன் இண்டெர்நேஷ்னல் யூடியூப் பக்கத்தில், அஜித் ரசிகர்களுக்கு வார இறுதி விடுமுறைக்காக இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக, வேதாளம் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
ஆனால், லிங்கை திறந்தால் படம் வெளியாகாத சூழல் இருக்கிறது. இது அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Special Treat for AK fans! #Vedhalam Full movie is out now on Ayngaran YT Channel 🕺
— Ayngaran International (@Ayngaran_offl) November 3, 2023
▶️ https://t.co/CaPZjrdqT4#AjithKumar