திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகமிருக்குதா.? இப்போ எப்படி இருக்கிறாங்க தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தனது நடிப்பு திறமையாலும், ஸ்டைலினாலும் ரசிகர்களை கவர்ந்து 90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்து வெற்றி நடைபோட்டுவரும் விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்ற செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது போன்ற நிலையில் விஜயின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக இருந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இப்படத்திற்குப் முன்பு விஜய் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்து வந்தார். ஆனால் இப்படம் வெற்றி அடைந்து விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.
மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிறுமியின் நிஜபெயர் நிவேதிதா, இவர் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இருந்தபோதிலும் இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரே திரைப்படம் அழகிய தமிழ் மகன் தான். இவ்வாறு குழந்தை நட்சத்திர நடிப்பிற்காக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 10 விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது! இவ்வளவு அழகா இருக்காங்களே? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.