திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாரதி கண்ணம்மா லட்சுமி பாப்பாவா இது! எவ்வளவு அசத்தலா சிலம்பம் சுத்துறார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. மேலும் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இதன் ஒரு எபிசோடை கூட தவறவிடாமல் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ரோஷினி என்பவர் நடித்து வருகிறார். இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். மேலும் அதில் பாரதியாக அருண் பிரசாத் நடித்து வருகிறார். கணவனை பிரிந்து தனது உழைப்பாலேயே மகளை வளர்க்க போராடும் தாயின் கதையை மையமாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை தூண்டுளவிற்கு சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் மகளாக சௌந்தர்ய லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குழந்தை ரக்ஷா. இவர் சமீபத்தில் பார்ப்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்வகையில் அசத்தலாக சிலம்பம் சுற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி லைஸ்க்குகளை குவித்து வருகிறது.