திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சில்க் சுமிதாவுக்கு சீமந்தம்! அட.. அது யார்னு பார்த்தீங்களா!ஷாக்காகிருவீங்க! நெகிழ்ச்சி சம்பவம்!!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வசித்து வந்தவர் குமரேசன். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகனும், கல்பனா தேவி என்ற மகளும் உள்ளனர். குமரேசனின் மகன் மற்றும் மகள் இருவருக்கும் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் மிகவும் விருப்பமாம்.
தங்களின் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய பெண் நாயை எடுத்து வந்து அதற்கு சில்க் சுமிதா என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நாய் கருவுற்ற நிலையில் அவர்கள் அதனை தங்களது உறவினராக பாவித்து அதற்கு தங்களது வீட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்படி அவர்கள் உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து சில்க் சுமிதாவுக்கு பிடித்த எலுமிச்சை, புளி, தயிர் சாதம், பொங்கல், கேசரி என 5 விதமான உணவுகளை கொடுத்து புதிய ஆடை, மாலை அணிவித்து வளையல்கள் மாட்டி வளைகாப்பு நடத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெகிழ வைத்துள்ளது.