மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ViralPromo: "Zip போட்டு மூடுங்க கோபி" புடவையில் சிக்னல் கொடுத்த ராதிகா., தலையாட்டிய கோபி.. இது சங்கம சங்கதி.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நெடுந்தொடர் பாக்யலட்சுமி & பாண்டியன் ஸ்டோர்ஸ். இரு தொடர்களும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது இரண்டு நாடகமும் இணைந்து சங்கமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ராதிகாவுடன் கொடைக்கானல் தேனிலவுக்கு திட்டமிட்டு இருந்த கோபிக்கு ஆப்படிக்கும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சங்கமம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்கு ஏற்றவாறு கோபியை கண்டுகொள்ளாமல் ராதிகா தனது வேலைகளை கவனித்துக்கொண்டு இருக்கும் நிலையில், காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடியாக இருப்பதால் தேனிலவை கொண்டாட இயலாமல் கோபி புலம்புகிறார்.
இதில், நாளைய தினத்தில் விருது வாங்க காத்திருக்கும் கோபிக்கு என்னென்ன சம்பவம் நடக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. இதனையே இன்றைய ப்ரமோவில் வெளியிட்டு இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.