பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த வேகத்தில் பாலாஜி பார்க்கப்போன முதல் நபர், யாரென தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவிங்க.!



balaji-meet-stalin-after-came-from-bigboss-7R4DBT

பிக்பாஸிலிருந்து வெளியேறிய கையோடு நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் 2 .இதில் 16  போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 10 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் 6 பேர் நிகழ்ச்சியில் இருந்தனர்.அதில் கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

மேலும் ஆரம்பத்தில் அதிகமாக கோபம் கொள்வது, புறம் பேசுவது என இருந்த பாலாஜி நாட்கள் ஆக அவருக்குள் பல மாறுதல்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் பைனலுக்கு செல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் பாலாஜி வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி அளித்தது.

balaji
 
இந்நிலையில்  பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி, தனது வீட்டிற்கு கூட செல்லாமல் முதல் வேலையாக நேராக திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர்  திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளார்.