மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆரிக்கு பிறந்தநாள்! வேற லெவல் புகைப்படத்துடன் பிக்பாஸ் பாலாஜி என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல டாஸ்குகளையும் சிறப்பாக செய்து, மக்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றியாளரானார் நடிகர் ஆரி. அவர் 2010 ஆம் ஆண்டு ரெட்டைசுழி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆரி நெடுஞ்சாலை, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் நடிப்பு மட்டுமின்றி சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்து சமூகப் பிரச்சினைகளுக்கும் முன்னின்று குரல் கொடுத்துள்ளார். மேலும் ஏராளமான உதவிகளையும் செய்துள்ளார்.அதுமட்டுமின்றி ஆரி மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை மூலம் இளம் சமுதாயத்திற்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
Happy birthday partner @Aariarujunan
— Balaji Murugadoss (@OfficialBalaji) February 12, 2021
Ini vazhkai la Vetri mattumae kana vazhthukal ❤️#HBDAari pic.twitter.com/Z6EMHuckOC
இந்நிலையில் இன்று ஆரி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் அடிக்கடி சண்டை போட்டுகொண்டு பின்னர் இறுதியில் புரிந்துகொண்டு சமாதானமாகி சகோதரனாக இருந்த பாலாஜியும் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆரியுடன் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர் ஆரி, இனி வாழ்க்கைல வெற்றி மட்டுமே காண வாழ்த்துகள் என ஆரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.