மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னப்பா நடக்குது இந்த பிக்பாஸ் வீட்டுல! கடுப்பான நடிகர் பரத்! பிக்பாஸிற்கு செல்ல ரெடியான இரு நடிகர்கள்! யார்னு பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக 50 நாட்களுக்கு மேல் கடந்துள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கடந்தவாரம் பாடகி சுசித்ரா என இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பிக்பாஸ் நாள்தோறும் வித்தியாசமான பல டாஸ்குகளை கொடுத்து வருகிறார். இதனால் மோதல், வாக்குவாதங்களும் உருவாகி வருகிறது. ஆனாலும் பிக்பாஸ் போட்டி ஆரம்பத்தில் இருந்தது போல சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக பார்வையாளர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் தற்போது கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Bro shall we both go in ?
— PREMGI (@Premgiamaren) November 25, 2020
If you ok I am ok 😬
— PREMGI (@Premgiamaren) November 25, 2020
இந்த நிலையில் நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸில் இருந்து அனைத்து டம்மி பீசுகளையும் வெளியேற்றி விடுங்கள். ஏனென்றால் அவர்களிடத்தில் நான் எந்த ஒரு கன்டென்டையும் பார்க்க முடியவில்லை என்று பதிவிட்டு விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து இருந்தார். இந்த நிலையில் அந்த பதிவிற்கு நடிகர் பிரேம் ஜி, நாம் இருவரும் உள்ளே செல்லலாமா என கேட்க, அதற்கு பரத் நீங்கள் போக விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பிரேம்ஜி உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று பதிவிட்டிருக்கிறார்