வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நான் ஒன்னும் டிரஸ் போடாம வரலை.. ஆடை சர்ச்சையில் சிக்கிய பாவனா பதிலடி!!
தமிழ், தெலுங்கு, கன்னடம்
என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அவர் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அண்மையில் அவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது.
#Bhavana #BhavanaMenon pic.twitter.com/8N8K40jSpn
— Dominic Dom (@Dommtoretto2) September 22, 2022
அப்போது விழாவில் பங்கேற்க வந்த பாவனா அணிந்திருந்த உடை இணையத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அவரை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து ரீல்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் அதற்கு நடிகை பாவனா பதிலடி கொடுத்துள்ளார். அவர், நான் கை தூக்கும்போது தெரிந்தது எனது உடல் அல்ல, நான் உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் டாப் போட்டிருந்தேன். மேலாடை மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை நான் கிடையாது என காட்டமாக கூறியுள்ளார்.