மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் அம்சமாக களமிறங்கும் நடிகை பாவனா! செம ஹேப்பியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதனை தொடர்ந்து அவர் கூடல்நகர், வெயில், தீபாவளி, அஜித்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
மேலும் நடிகை பாவனா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் இறுதியாக 2017-ல் வெளியான ஆதம் ஜான் படத்தில் நடித்திருந்தார். பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர் தற்போது மீண்டும் மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது நடிகை பாவனா மலையாளத்தில் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premondarnn) என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், ஆதில் மைமுனத் அஷ்ரப் இயக்கும் இந்த படத்தில் பாவனாவுக்கு ஜோடியாக ஷரபுதீன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.