ப்பா.. வேற லெவல்! சவுண்டு சும்மா தெறிக்குதே! பீஸ்ட் படக்குழு வெளியிட்ட புதிய மாஸ் ட்ரைலர்!!



beast-movie-new-trailer-released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 

யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதன் டிரெய்லர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சவுண்ட் குவாலிட்டியுடன் புதிய ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.