மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது எப்படி சாத்தியம்... 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலேயே இருந்த பிரியங்காவுக்கா... விஜய் டிவி செய்ததை விமர்சிக்கும் ரசிகர்கள்...
விஜய் தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மேலும் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கலகலப்பாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
அதிலும் மாகாபா ஆனந்துடன் இணைந்து அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது. பிரியங்கா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 யில் கலந்து கொண்டு 100 நாட்களுக்கு மேல் இருந்து அந்த நிகழ்ச்சியில் ரன்னராகவும் ஆனார். இந்நிலையில் சமீபத்தில் இந்த வருடத்திற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளினிகான விருது வழங்கப்பட்டு உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இது சாத்தியம் 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் பின் சில நாட்கள் ஓய்வெடுத்த பின்பே பிரியங்கா சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார். அப்படி இருந்த பிரியங்காவிற்கு எப்படி சிறந்த தொகுப்பாளினி விருது வழங்க முடியும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.