மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திகிலூட்டும் அனுபவத்துடன் பேய் படம் பார்க்க என்னமா? உங்களுக்கான மிரட்டல் படங்கள் இதோ.!
உள்ளூர் பேயோ, வெளியூர் பேயோ, திகில் படங்கள் என்றாலே கண்களை மூடிக்கொண்டு, சிறிய அளவு ஓட்டை வழியே மொத்த படத்தையும் பயத்துடன் நடுநடுங்கி பார்த்துவிட்டு, தன்னை பெரிய மாவீரர் போல பாவித்துக்கொள்ளும் பல நல்ல உள்ளங்கள் வாழும் உலகில், திகில் படங்களுக்கான மௌசு என்பது எப்போதும் குறைவது இல்லை.
அந்த வகையில், பதறவைக்கும் வகையிலான ஓடிடியில் இடம்பெற்றுள்ள படங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம். உங்களின் வீகென்ட் சமயத்தில் கட்டாயம் இந்த படம் உதவும். திருமணமான, காதல் ஜோடிகள் தங்களின் இரவுகளை திகிலுடன் கொண்டாடலாம்.
இதையும் படிங்க: தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!
தி வைலிங் (The Wailing)
கடந்த 2016ம் ஆண்டு வெளியான தி வைலிங் திரைப்படம், கிராமம் மர்ம நோயால் பாதிக்கப்படும் கதையை கொண்டது. மர்ம நோய்க்கான காரணம் என்ன? மர்ம நபர் யார்? என காவல்துறை அதிகாரி கண்டுபிடிக்கும் திகில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். இதனை ஜியோ சினிமாவில் நீங்கள் காணலாம்.
இன்சிடியஸ் (Insidious)
கடந்த 2010ம் ஆண்டில் திகிலூட்டும் அனுபவத்துடன் வெளியான இன்சிடியஸ் திரைப்படம், கோமாவில் இருக்கும் குழந்தையை ஆட்டுவிக்கும் தீய சக்தியை பெற்றோர் துணிந்து விரட்டுவது ஆகும். இதனை நெட்பிளிக்ஸ், அமேசான் ஓடிடியில் காணலாம்.
பறி (Pari)
கடந்த 2018 ல் வெளியான பறி, மர்மம் நிறைந்த வீட்டில் இருக்கும் பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கும் தீய சக்திகளும், அவரை காப்பாற்ற போராடும் ஹீரோவும் என படம் அட்டகாசமாக இருக்கும். இதனை அமேசானில் நீங்கள் பார்க்கலாம்.
மசோடா (Masooda)
கடந்த 2022 ல் வெளியான மசோடா, மகிழ்ச்சியாக வாழும் தாய், அவரின் மகளை தீயசக்தி படுத்தியெடுக்கும் காட்சிகள் இருக்கும். இதில் இருந்து இருவரும் மீண்டனரா? தப்பித்தார்களா? என்பதுதான் கதை. இதனை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.
13பி (13B)
கடந்த 2009 ல் நடுநடுங்க வைக்கும் வகையில் வெளியான இப்படம், குடியிருப்பை வாங்கி குடியேறும் நபரின் எதிர்காலம் டிவியில் வெளியாகி அதிர்ச்சிதரும். இந்த அமானுஷ்ய சக்திகள் கொண்ட வீட்டில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பது கதை. இதனை அமேசானில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: என்.டி ராமசாமிக்கு பளார் விட்ட பெண்; கலங்கிப்போன நடிகர்.. திரையரங்கை பதறவிட்ட பரபரப்பு சம்பவம்.!