பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்.டி ராமசாமிக்கு பளார் விட்ட பெண்; கலங்கிப்போன நடிகர்.. திரையரங்கை பதறவிட்ட பரபரப்பு சம்பவம்.!
கீதன்ஸ் புரொடக்சன்ஸ், எம்ஜிஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், சமரன் ரெட்டி இயக்கத்தில், நடிகர்கள் அஞ்சான் ராமச்சந்திரா, செரவாணி, என்டி ராமசாமி உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் லவ் ரெட்டி (Love Reddy).
சிசவசங்கர் வரப்ரசாத் ஒளிப்பதிவில், பிரின்ஸ் ஹென்றி இசையில், கோத்தகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங்கில் வெளியான திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Pushpa 2: புஷ்பா 2 படத்தின் வெளியீடு தேதி மாற்றம்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திரையரங்கில் நேரடி விசிட்
காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம், பலராலும் ரசிக்கப்பட்டது. இதனிடையே, படக்குழு ரசிகர்கள் படம் பார்த்ததும், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக திரையரங்குக்கு நேரடி விசிட் அடித்து இருந்தது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில், லவ் ரெட்டி படம் ஓடிய திரையரங்குக்கு படக்குழு சென்று இருந்தது. அங்கு ரசிகர்களுடன் அவர்கள் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
இதனிடையே, படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த என்.டி ராமசாமி என்ற நடிகர், காதல் ஜோடியை கதைப்படி பிரித்ததாக தெரியவருகிறது. கதை ஒரு பெண்ணின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிவாங்கி கலங்கிப்போன நடிகர்
ராமசாமியை நேரில் கண்டு ஆவேசமடைந்த நடிகை, காதல் ஜோடியை ஏன் பிரித்தாய்? என பாய்ந்து வந்து நடிகருக்கு பளார் விட்டு தாக்குதல் நடத்தினார். இதனால் நடிகர் அறைகளை வாங்கிக்கொண்டு கலங்கிப்போனார்.
பெண்ணின் ஆவேசத்தை புரிந்துகொண்ட சிலர் செய்வதறியாது தஹிகைத்துப்போயினர். பெண் யார் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து நடிகரை அடிக்க பாய்ந்தார். இதனால் அங்கு லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது.
This Made My Day Already😭😭😂😂
— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 25, 2024
pic.twitter.com/ZdsTZhXAzK
இதையும் படிங்க: கொலை வழக்கில் சிக்கிய நடிகரை காண ஆட்பறித்து அலப்பறை செய்த ரசிகர்கள்..!