மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாக்கியலட்சுமியிலிருந்து கோபி விலக இதுதான் காரணமா.? ரசிகர்கள் அதிர்ச்சி.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மெஹா ஹிட் அடித்து ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல்தான் பாக்கியலட்சுமி. இதில் கோபியின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். அவரது முன்னாள் மனைவியாக சுஜித்ரா என்ற கன்னட நடிகையும், மனைவியாக ரேஷ்மா பசுபெல்தியும், மகனாக விஜே விஷாலும் நடித்து வருகின்றனர்.
கோபி கதாபாத்திரமானது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சதீஷ் கோபி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே சொல்லலாம் அவ்வளவு அற்புதமாகவும் தத்ரூபமாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஆரம்பத்தில் கோபி கேரக்டர் டெர்ரராகக் காட்சி வந்தது. அப்போது அந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை நாளடைவில் தனது இரு மனைவிகளுக்கு மத்தியில் கோபி மாட்டிக்கொண்டு படும்பாடு ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது.
இந்த நிலையில் கோபி சதீஷ், வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் இனி பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க போவது இல்லையெனவும் அதிலிருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார். தனது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளின் காரணமாகவே அவர் பாக்கியலட்சுமியிலிருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். இச்செய்தி பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்திருக்கிறது.