ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வாவ்.. கியூட் போட்டோஷூட்! பாரதி கண்ணம்மா வெண்பாவின் குழந்தையை பார்த்தீங்களா! குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக, டாக்டர் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா ஆசாத். இத்தொடரில் இவரது நடிப்பு பலரையும் மிரள வைத்துள்ளது. பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானார்.
பரினா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி வித்தியாசமான கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் பரினாவுக்கு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
மேலும் அண்மையில் பரினாவின் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு நடிகர் ஆரி வருகை தந்திருந்தார். மேலும் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். பரினா தன் மகனுக்கு ஸாய்ன் லாரா ரஹ்மான் என்று பெயர் வைத்துள்ளார். மேலும் முதன்முதலாக தனது மகனின் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பரினா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.