மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாரதி கண்ணம்மா தொடரில் இனி புதிய அஞ்சலி யார்னு பார்த்தீங்களா! அட.. இவர் அந்த சீரியலில் நடிச்சவராச்சே!!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரோஷினி பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் கண்மணி மனோகரன். ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த அவர் தற்போது மனம் மாறி நல்லவராக நடித்து வந்தார். இந்நிலையில் அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி அண்மையில் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது புதிய அஞ்சலியாக நடிக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனி பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக அருள் ஜோதி என்பவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அருள்ஜோதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் தொடரில் தற்போது நடித்து வருகிறார்.