"கள்ளிப்பால் கொடுத்து கொன்னுட்டாங்க" - இயக்குனர் டிஜே ஞானவேல் வேதனை.. காரணம் என்ன?
ப்பா.. தேவதைடா! கடற்கரையில் கொள்ளை அழகில் பாரதி கண்ணம்மா அஞ்சலி! சொக்கிபோன இளசுகள்!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடனும், நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுடன் சுவாரசியமாக சென்று மக்களை கவர்ந்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் சமீபத்தில் ரோஷினி தொடரிலிருந்து விலகியதை தொடர்ந்து வினுஷா தேவி என்பவர் தற்போது புதிய கண்ணம்மாவாக நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருபவர் கண்மணி மனோகரன். ஆரம்பத்தில் இத்தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது மிகவும் நல்லவராக அசத்தலாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது கடற்கரையில் நீல நிற உடையில் எடுத்த கியூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.