ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து பாரதி கண்ணம்மா வில்லி வெளியிட்ட சூப்பர் புகைப்படம்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் இந்த தொடரில் ஹீரோ பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியாக, டாக்டர் வெண்பாவாக நடித்து மிரள வைத்து வருபவர் நடிகை ஃபரீனா.
ஃபரீனா இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர்
கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் ஃபரீனாவுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை மிகவும் மகிழ்ச்சியாக அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். இந்த நிலையில் ஃபரீனா தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு நார்மல் டெலிவரி நடந்ததாகவும், தானும் குழந்தையும் மிக நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.