மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா இதெல்லாம்.. கர்ப்பிணியாக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாரதி கண்ணம்மா வெண்பா செய்த காரியத்தால் பதறிய ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாரதிகண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் நடிகை ஃபரீனா.
பல பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால் இவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது பாரதிகண்ணம்மா தொடர்தான்.
நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்த தகவலை அவர் புகைப்படத்துடன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வித்தியாசமான போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பரீனா தற்போது தண்ணீருக்குள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் சிலர் ஆச்சரியம் அடைந்து பாசிட்டிவாக வாழ்த்தி வருகின்றனர். மேலும் சிலர் கர்ப்பிணியாக இருக்கும்போது இப்படி செய்யலாமா? என கூறிவருகின்றனர்.