மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் பாரதிராஜாவிடம் "மீ டூ" பற்றி கேட்ட ஒரே வார்த்தை! கடுப்பான பாரதிராஜா!.
பாடகியான சின்மயி சமீபத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு சமூகவலைத்தளங்களில் சின்மயிக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றது. மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் சின்மயிக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரான பாரதிராஜா இன்று இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் "மீ டூ" பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மன்னிக்க வேண்டும், என்னைப் பற்றி எதுவாக இருந்தாலும் கேளுங்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "மீ டூ" என்றால் என்ன? திரையுலகில் பாலியல் தொந்தரவு குறித்து கேட்ட போது நீங்கள் பார்த்தீர்களா? கேள்விதான் பட்டிருக்கிறீர்கள், ஆதாரம் இருந்தால் கூறுங்கள், நான் அதற்கு பதில் அளிக்கிறேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் வைரமுத்து-சின்மயி பிரச்சனை என்று கேட்ட போது, என்ன பிரச்சனை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.