மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. ஹோம்லியான லுக்! தமிழ்நாட்டின் ஏஞ்சல் நீ.! புகழ்ந்து தள்ளிய இயக்குனர் பாரதிராஜா.! யாரை பார்த்தீங்களா!!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.
இதில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, விருமன் எனது மண்ணை சேர்ந்தவன். கார்த்தி நல்ல நடிகர், டான்சர் என தெரியும். ஆனால் ஷங்கர் மகள் புதியவர். அவர் படித்தவர். எம்.பி.பி.எஸ் டாக்டர். அவளை ஷங்கர் சினிமாவில் அறிமுகம் செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு ஹோம்லியான முகம். அருமையாக டான்ஸ் ஆடுகிறாள். அவருக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கு. அதிதி நீ தமிழ்நாட்டின் ஏஞ்சலாக வருவாய். அவரிடம் அதற்கான அழகும், லட்சணமும் இருக்கிறது என புகழ்ந்து கூறியுள்ளார்.