ஆரம்பமானது சாண்டியின் ஆட்டம்! மாஸாக என்ட்ரி கொடுத்த லாலா - தீயாய் பரவும் வீடியோ.



big-boss-3-sandy

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும், அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாகவும் அமைந்தது. கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசனில் கலந்து கொண்டவர்களை யாராலும் மறக்க முடியாது.

மேலும் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக அமைய டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு வீட்டில் உள்ள அனைவரிடம் ஜாலியாகவும், அனைவரையும் சந்தோஷப்படுத்தியும் வந்தவர்.

Sandy

அதன் மூலம் மக்கள் மனதை வென்று பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாம் இடத்தை வென்றார். தற்போது இவரின் கலக்கலான ஆட்டமும், லாலாவின் மாசான என்ட்ரியும் அமைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.