மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் 7 சீசனில் போட்டியாளர்களாக களம் இறங்கும் பிரபலங்கள்... அட இவர்களா!! வெளியான லிஸ்ட்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான கேம் ஷோவில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் வருகின்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அடி எடுத்து வைக்க உள்ளது. இந்த சீசனையும் வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய விஷயங்களை புரொமோவில் கூறி வருகின்றார் கமல்ஹாசன். அதாவது ஒரு வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடு என கூறப்படுகிறது. இதனால் இந்த சீசன் எப்படி இருக்கும்,எப்படியான போட்டிகள் இருக்க போகிறது. எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற கேள்வி எல்லாம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகரான ப்ருத்விராஜ், மௌன ராகம் சீரியல் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.