மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திக்.. திக்.. சம்பவம்.! பிக் பாஸ் அர்ச்சனாவை துரத்திய பேய்..! பேட்டியில் பகிர்ந்த திகில் அனுபவம்.!
பேயைப் பார்த்து அலறி அடித்து ஓடியதாக பிக்பாஸ் அர்ச்சனா தன் பீதியான அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த நேர்க்காணலில் கூறியுள்ளார்.
தொலைக்காட்சித் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி பின்னர் படிப்படியாக பிரபலமடைந்தவர் அர்ச்சனா. அவருக்கு ஒரு முதல் வாய்ப்பு அமைந்தது விஜய் டிவியில் வெளியான 'ராஜா ராணி 2' சீரியல். கிடைத்த வாய்ப்பை படு சூப்பராக பயன்படுத்தி கேரக்டருக்கு ஏத்த மாதிரி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார்.
தொடர்ந்து பிரபலமான அர்ச்சனா, திடீரென சீரியலில் இருந்து விலகினார். பின்னர் ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்து போன அவர், தடாலடியாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக 28 ஆம் நாள் என்ட்ரி கொடுத்து கெத்து காட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த சமயத்தில் அங்கு நடந்த புல்லி கேங்கினை எதிர்க்க முடியாமல் எடுத்ததற்கு தொட்டதற்கு எல்லாம் அழும் தொட்டாசிணுங்கியாக இருந்தார் அர்ச்சனா. போகப் போக கேம் பிளானை புரிந்து கொண்டு பக்காவாக விளையாடி, அனைவருக்கும் டஃப் கொடுத்து அதிரடியாக ஆடி, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார். வைல்ட் கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வின்னராகத் தேர்வான முதல் நபர் அர்ச்சனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷாக்கிங் தகவலை சொல்லி அனைவரையும் திகில் அடையச் செய்துள்ளார். அவருக்கு நடந்த ஒரு மர்மான சம்பவம் பற்றி கூறி பீதி அடையச் செய்துள்ளார்.
"ஒரு நாள் ஷூட்டிங் முடிச்சுட்டு நைட் 2 மணி போல வீட்டுக்குப் போய்ட்டு இருந்தேன். எங்க வீட்டுக்கு இன்னும் பத்து நிமிஷத்துல போயிடலாம். அப்போ ஹலுசினேஷனா, இல்ல பேயா என எனக்குத் தெரியல. பேய் விஷயத்துல நான் பொய் சொல்ல மாட்டேன்.
போய்க்கிட்டே இருக்கும்போது 100 அடி மீட்டரில், ப்ளூ அண்ட் ஆஷ் ஷர்ட் போட்ட ஆள் ஒருத்தர் நிக்குறாரு. நான் பயங்கர ஸ்பீடா கார் டிரைவ் பண்ணிட்டு வந்தேன். நான் வந்த ஸ்பீடுக்கு அவரை எப்பவோ கிராஸ் பண்ணியிருக்கணும். ஆனா ஒரு 100 மீட்டருக்கு அவர் என்னோட இந்த கார் சைடுல வந்துகிட்டே இருந்தாரு. அது எனக்கு சைட் மிர்ரர்ல தெரிஞ்சுது. அந்த இடத்துல நிக்கவே இல்ல. அதைப் பார்த்து பயந்து போய் அலறி அடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன்" எனக் கூறியுள்ளார். அர்ச்சனா பகிர்ந்துள்ள இந்த அமானுஷ்ய கதை அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது