மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வித்தியாசமான ரோலில் நடிக்கும் பிக்பாஸ் ஆரி! வெளிவந்த சூப்பர் தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசனில் கலந்துகொண்டு தனது நேர்மையான, வெளிப்படையான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் ஆரி. இவர் தனது திறமையான விளையாட்டால் அந்த சீசனின் வெற்றியாளரானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
அதுமட்டுமின்றி நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் கைவசம் மூன்று திரைப்படங்கள் உள்ளன. இந்த நிலையில் அவர் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ மணி என்பவர் இயக்கவுள்ளார். மேலும் ஏஜிஎஸ் யோகராஜ் என்பவர் தயாரிக்கவுள்ளார் .
இப்படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் ஆரி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கான பூஜை விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. மேலும் அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.