திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓ.. இவர்தானா.!! ஒருவழியாக தனது காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் ஆயிஷா!! வைரலாகும் நெருக்கமான கியூட் புகைப்படங்கள்!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஆயிஷா. ஒரு சில காரணங்களால் அவர் அந்த தொடரை விட்டு பாதியிலேயே விலகினார். பின்னர் ஆயிஷா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சத்யா தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். இந்த தொடரின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
தொடர்ந்து அவர் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சிறப்பாக விளையாடி இறுதிவரை சென்ற அவர் ரன்னரானார். இந்த நிலையில் ஆயிஷா விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் பின்னர் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்தபோது தனது காதலர் குறித்து சில போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஆயிஷா தனது காதலனை முதல்முதலாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.