மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கலாஷேத்ராவில் இருந்தே எனக்கு இந்த பழக்கம் உண்டு!" அபிராமி ஓபன் டாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். 2016ம் ஆண்டு "ctrl alt delete" என்ற வலைத் தொடரில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவியில் "ஸ்டார் வார்ஸ்" என்ற ரியாலிட்டி ஷோவை இவர் தொகுத்து வழங்கினார்.
இதையடுத்து 2018ஆம் ஆண்டு "நோட்டா" திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் அபிராமி வெங்கடாச்சலம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அஜித் நடித்த "நேர் கொண்ட பார்வை" படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு வலைத்தொடர்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வரும் அபிராமியிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில், "நீங்கள் சீக்கிரம் தயாராக வேண்டுமென்றால் எந்த உடையைத் தேர்வு செய்வீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அபிராமி, " கண்டிப்பாக புடவையை தான் தேர்வு செய்வேன். எந்த சேப்டி பின்னும் ஐந்து நிமிடத்தில் என்னால் புடவை கட்டிவிட முடியும். கலாஷேத்ராவில் இருந்தே எனக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது" என்று அபிராமி வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.