மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்திற்கு வில்லனாகும் பிக்பாஸ் ஆரவ் .? வெளியான தகவல்..
2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த "சைத்தான்" திரைப்படம் மூலம் அறியப்பட்டவர் ஆரவ். முன்னதாக இவர் 'அமரகாவியம்' என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து "ஓ காதல் கண்மணி" படத்திலும் நடித்திருந்தார்.
விளம்பரப்படங்களில் நடித்து தென்னிந்திய மாடலாக வலம் வரும் ஆரவ், தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் ஆரவ்.
இந்நிலையில், அஜித் நடிக்கும் "விடாமுயற்சி" படத்தில், அஜித்துக்கு வில்லனாக சஞ்சய் தத்தும் , ஆரவ்வும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லைக்கா நிறுவனத் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கும் "விடாமுயற்சி" படம், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதத் துவக்கத்தில் அபுதாபியில் "விடாமுயற்சி" படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரவ், ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கிய "கலகத்தலைவன்" படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.