மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவரா! கசிந்த ஷாக் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சண்டை, வாக்குவாதங்கள், கண்ணீருக்கு பஞ்சம் இல்லாமலும் சென்று கொண்டுள்ளது. 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்து சில காரணங்களால் ஓரிரு நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை தொடர்ந்து நாடியா சாங் மற்றும் அபிஷேக் ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வாரம் நாட்டுப்புற பாடகி சின்னப் பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் 14 போட்டியாளர்கள் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டு சுவாரஸ்யமாக சென்றது. மேலும் தீபாவளி கொண்டாட்டமும் கோலாகலமாக அரங்கேறியது. இந்நிலையில் இந்த வாரம் அக்ஷரா, சிபி, சுருதி, நிரூப் , பாவனி, அபினய் உள்ளிட்ட 9 பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் அபினய் மற்றும் சுருதி மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்களில் சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.