மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமுக்கமாக இருந்துவிட்டு, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா.! தீயாய் பரவும் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6வது சீசன் தொடங்கி சண்டை, சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு துறையை சேர்ந்த 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஜி.பி முத்து குடும்பத்தின் மீது கொண்ட ஏக்கத்தினால் அவரே தானாக வீட்டில் இருந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் சாந்தி மாஸ்டர், மூன்றாவது வாரத்தில் அசல் கோலார் மற்றும் கடந்த வாரம் ஷெரினா ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வீட்டில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகளால் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா ஆகியோர் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் விக்ரமன் மற்றும் அசீனுக்கு அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தொடர்ந்து ஏடிகே, ஆயிஷா தனலட்சுமி ஆகியோருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது எனவும் மகேஸ்வரி மற்றும் ராம் ஆகியோருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சில வாக்குகள் வித்தியாசத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராம் வெளியேறலாம் என கூறப்படுகிறது.