ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்பை சொல்லபோவது இவரா.! வந்த முதல் வாரமே இப்படியா! கசிந்த தகவல்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகளால், சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது. 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா ராவ் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது எனக்கூறி அவராகவே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா மற்றும் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினர்.
மேலும் விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ், பிராவோ, கானா பாலா, அன்னபாரதி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் மாயா, ஐஷு, ஆர்ஜே பிராவோ, மணி, அக்ஷயா, அன்ன பாரதி, கானா பாலா, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அன்ன பாரதி குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.