ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனுக்கு திடீர் திருமணமா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் சில ரசிகர்களை தனது நடிப்பினாலும், அழகினாலும் கவர்ந்திருந்த ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தார். கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வரும் சிவனி நாராயணன் தற்போது கோவிலில் மாலையுடன் நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவனுக்கு கல்யாணம் ஆக போகுதா என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.