ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் பாத்திமா பாபுவா இது? புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் பிக்பாஸ் குழு அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ல் 16 போட்டியாளர்களுள் ஒருவராக செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு கலந்து கொண்டுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாகவும், பொறுப்புடனும் நடந்து கொள்கிறார். மேலும் சக போட்டியாளர்கள் பலரும் அவரை அம்மா என அனைத்து வருகின்றனர். மேலும் அதற்கேற்றதுபோல் அவரும் அவர்களிடம் தாயுள்ளத்துடன் பழகி வருகிறார். இதனாலேயே பாத்திமா பாபுவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
#BiggBossTamil3 #FathimaBabuArmy #FathimaBabu
— Fathima BaBu ARMY (@fathimababuarmy) June 28, 2019
Rare pic😍😍😍 pic.twitter.com/4pX7Gb33RU
இந்நிலையில் பாத்திமா பாபுவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பாத்திமா பாபுவா இது, அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.