மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏன் அப்டி செஞ்ச? பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே ரியோவின் மனைவி கேட்ட சரமாரிகேள்வி! ஷாக்கான போட்டியாளர்கள்!
பிக்பாஸ் சீசன் 4 , 11 வாரங்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமான Freeze டாஸ்க் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று முதலில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் ஷிவானி இருந்த நிலையில், அவரது அம்மா அவரை சரமாரியாக விளாசி வாங்கினார். இதனை எதிர்பாராத ஷிவானி கதறி அழுதார். அவரை தொடர்ந்து பாலாவின் நண்பர் வந்து ஜாலியாக பேசி சென்றார்.
#Day87 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/BGZuUNVJtG
— Vijay Television (@vijaytelevision) December 30, 2020
இந்த நிலையில் இன்று ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகிறார். அவரை கண்டதும் ரியோ மகிழ்ச்சியில் அவரை கட்டியணைத்து கண்கலங்கினார். பின்னர் அனைவரிடமும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த ஸ்ருதி ஒரு டாஸ்கில் எதுக்கு ஓடிபோய் ரம்யா பாண்டியனை அலேக்காக தூக்கின என ரியோவிடம் கிண்டலாக கேட்க அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் அது டாஸ்க் என கூறி சிரிக்கின்றனர். பிக்பாஸ் வீடே கலகலவென ஆனது. இந்த பிரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.