திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா..கேபியா இது! கிராமத்து தேவதையாய் என்னா வெட்கம்! எம்புட்டு அழகு! சொக்கிப்போன இளசுகள்!!
தமிழில் தனுஷ் மற்றும் ஸ்ருதி நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக, ஸ்ருதியின் தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் துணை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேப்ரில்லா சிறுவயதிலேயே விஜய் தொலைக்காட்சியில் நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார். பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாடகர் ஆஜித்துடன் இணைந்து போட்டியாளராக களமிறங்கி தனது நடன திறமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது மாடர்ன் புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது பாவாடை தாவணியில் அப்படியே கிராமத்து பெண்ணாக மாறி அழகாக வெட்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் கேபியா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.