மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. இலங்கை பெண் ஜனனிக்கு என்னாச்சு.! கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ.! பதறிப்போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி சண்டை,சச்சரவு, கஷ்டமான டாஸ்க்குகள் என விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் துவக்கத்தில் 20 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். மேலும் மைனா நந்தினி வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் முதல் வாரத்திலேயே சில காரணங்களால் ஜி.பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆனார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலேயே மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் இலங்கையை சேர்ந்த ஜனனி. இவருக்கென பெரும்ஆர்மியும் உருவானது. இந்த நிலையில் பொம்மை டாஸ்க் நடந்து முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனனி கேமரா முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Why #Janany Papa cry with Camera 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️ #bigbosstamil6 #biggboss pic.twitter.com/DvBR4LgOtq
— Kɪɴɢ (@Mikah_Amyy17) October 28, 2022
அதில் அவர், எனக்கு கஷ்டமா இருக்கு. என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கு தனியாக இருப்பது போல உணர்கிறேன். சிலருக்கு என்னை பிடிக்கவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார். எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கண்ணீர் விட்டு அழுத வீடியோ பார்ப்போரை வருத்தப்பட வைத்துள்ளது.