அடஅட.. அரங்கமே அதிர வேற லெவலில் ப்ரபோஸ் செய்த அமீர்! கண்கலங்கிய பாவனி! வைரல் வீடியோ!!



Bigboss jodikal promo video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது க்யூட்டான சிரிப்பால், செயலால் அனைவரையும் கவர்ந்தவர் பாவனி. நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீருடன் நெருங்கி பழகினார். மேலும் முத்த சர்ச்சையும் அரங்கேறியது.

தற்போது இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டு அசத்தி வருகின்றனர். அங்கும் அமீர், பவானிக்கு தனது காதலை கூறினார். ஆனால் பாவனி எந்த முடிவும் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் அடுத்தடுத்ததாக ஏராளமான சர்ப்ரைஸ்களுடன், விலையுயர்ந்த மோதிரத்துடன் பவானிக்கு அமீர் வேற லெவலில் தனது காதலை மீண்டும் கூறியுள்ளார். அதனை கண்டு பாவனி கண்கலங்கியுள்ளார். மேலும் அரங்கமே ஆச்சர்யத்தில் உறைந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.