பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2; தலையில் அடித்துகொண்டு சிரித்த ரம்யா கிருஷ்ணன்! ஏன்? வைரலாகும் வீடியோ!!



bigboss-jodikal-season-2-promo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் முதல் நான்கு சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஜோடியாக இணைந்து தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றனர்.  இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐக்கி பெரி-தேவ், இசைவாணி- வேல்முருகன், அபிஷேக்- ஸ்ருதி, கணேஷ்கர்- ஆர்த்தி, அமீர்- பாவனி , சுஜா வருணி- சிவகுமார், பார்த்தசாரதி- தாமரை ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். ராஜு மற்றும் பிரியங்கா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2விற்கு ரம்யா கிருஷ்ணன் நடுவராக வருகை தந்துள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர். மேலும் தாமரையின் கணவர் பார்த்தசாரதி, சுஜா வருணியின் கணவர் சிவகுமார் மற்றும் ராஜு ஆகியோர் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அதனைக் கண்டு ரம்யா கிருஷ்ணன் ஜாலியாக தலையில் அடித்துக் கொண்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.