மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் ஆகாமலே அப்பாவான பிக் பாஸ் கவின்.?!
பிக்பாஸ் சீசன் 3-யின் மூலம் பிரபலமானவர் கவின். நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் விஜய் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரபலமடைந்த கவினுக்கு பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நட்புனா என்னனு தெரியுமா, லிப்ட் போன்ற திரைபடங்களில் நடித்தார். தற்போது
அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் டாடா என்ற திரைபடத்தில் ஹீரோவாகவும், அபர்ணா தாஸ் ஹீரோயினாகவும், நடித்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் காதலர்களாக இருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பே கதாநாயகி கர்ப்பமாகி விடுகிறார். பின்பு இருவரது வீட்டிற்கும் தெரிந்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். கதாநாயகன் கர்ப்பத்தை கலைக்கும் படி கூறியும் கதாநாயகி மறுத்து விடுகிறார். இருவருக்கும் சண்டை ஏற்பட்டு குழந்தை பிறப்பதற்கு முன்பே பிரிந்து விடுகின்றனர். இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாக அமைகிறது.
அப்பா, மகன் இடையே இருக்கும் பாசத்தை நடுநிலைப்படுத்தி எடுத்து இருக்கும் படத்தில் கவினின் நடிப்பை பாராட்டியும், இயக்குநர் கணேஷ் கே பாபுவை பாராட்டியும் பலரும் பாசிட்டிவாக விமர்சித்து வருகின்றனர். லவ் டுடே படத்தை போலவே இந்த படமும் பலராலும் பேசப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.