அட அட என்ன ஒரு அழகு... பிக் பாஸ் கவினின் காதலி யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்!!



bigboss-kavin-lover-photo-viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் கவின். அதனைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். என்னதான் சின்னத்திரையில் நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது தான் கவினின் கனவாக இருந்து வந்தது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கவினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட பின் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாடா மற்றும் லிஃப்ட் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Big boss Kavin

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கவினின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி வைரலானது. அதன்படி கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அவர் தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் திருமணம்,  இருவீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.